EV பேட்டரிகளை ஆய்வு செய்ய குழு
மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் மின்சார வாகன ( EV ) பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல வாகனங்கள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து EV பேட்டரிகளை ஆய்வு செய்ய அமைச்சகம் அமைத்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே தரநிலைகளின் வரைவை மின் வாகன தயாரிப்பாளர்களின் ஆலோசனைக்காக அனுப்பியுள்ளது,