எதிர்பார்த்தது 6560 கோடி , முதலீடு செய்ய முன்வந்தது ரூ.3.24லட்சம் கோடி..
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆரம்ப பங்கு வெளியீடு இந்திய வரலாற்றிலேயே இல்லாத அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் 6560 கோடி ரூபாய் நிதியை ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் பெற திட்டமிட்டது. முன்கூட்டியே முதலீட்டாளர்கள் முன்பதிவு செய்த தொகை 1758 கோடி ரூபாயாக உள்ளது. 4802 கோடி ரூபாய் மட்டுமே சந்தையில் இருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவன பங்குகளை வாங்க 88.94லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது 3.24லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் வாங்க மக்கள் ஏலம் கேட்டுள்ளனர். அதாவது தேவையை விட 67.4மடங்கு அதிகம் பணத்தை முதலீட்டாளர்கள் கொட்டியுள்ளனர். அந்த நிறுவனத்தின் ஐபிஓ செப்டம்பர் 11ஆம் தேதியுடன் நிறைவுற்றது. ஐபிஓ மதிப்பு ஒரு பங்குக்கு 66 முதல் 70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்ட ஆரம்ப பங்கில் 3042 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் 1.56லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தனர். அதே நிறுவனத்தில் 222மடங்கு அதிகம் பேர் அதாவது 2.6லட்சம் கோடி ரூபாய் வரை வாங்க முன்வந்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.