TCS வரலாற்றில் முதன் முறையாக…
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கின் விலை 41345.9 ரூபாயாக இருக்கிறது. இது மட்டுமின்றி சந்தை மூலதன அடிப்படையில் 15 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை முதல் முறையாக டிசிஎஸ் எட்டியுள்ளது. அண்மையில் யூரோப் அசிஸ்டன்ஸ் என்ற உலகளாவிய டிராவல் சுற்றுலா நிறுவனத்துடனான டீலை டிசிஎஸ் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்க இருக்கிறது. யூரப் அசிஸ்ட்டன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் உயரத் தொடங்கியிருக்கின்றன. டிசிஎஸ் மற்றும் யூரப் அசிஸ்டன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏ.ஐ மற்றும் அதற்கும் அதிகமான தொழில்நுட்பங்களை உருவாக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 2 விழுக்காடு வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் தனது லாபமாக 11058 கோடி ரூபாயை பதிவு செய்திருக்கிறது. இது கடந்த மொத்த வருவாயில் 4 விழுக்காடு அதிகமாகும். குறிப்பிட்ட காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 60,583 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் வருவாய் என்பது 1.5 விழுக்காடு அதிகம் என்றாலும் லாபம் 2.5 விழுக்காடு குறைந்திருக்கிறது. சட்டப்போராட்டத்துக்காக 958 கோடி ரூபாயை டிசிஎஸ் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஒரு நிறுவனத்தின் வருவாய் வட்டி மற்றும் வரிக்கு முன்பாக உள்ள தொகை என்பது ஆங்கிலத்தில் EBITஎன்று அழைக்கப்படுகிறது. அந்த EBIT மார்ஜின் என்பது கடந்த காலாண்டில் 25 விழுக்காடாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் இது 24.3விழுக்காடாக இருந்தது.