மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம்..
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்த ஃபோர்ட் நிறுவனம் படிப்படியாக அதற்கான பணிகளை செய்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது., சென்னையில் உள்ள ஃபோர்ட் ஆலையை படிப்படியாக விரிவாக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் நாளிதழின் தரவுகளின்படி ஃபோர்ட் நிறுவனம் புதிதாக 3 ஆயிரம் பேரை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாம். சென்னையில் மட்டும் ஃபோர்ட் நிறுவனத்தில் 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஃபோர்டின் புதிய மின்சார வாகனத்தை வடிவமைக்கும் பணிகள் சென்னையில் இருந்து தான் நடைபெற்று வருகின்றன. மெய்நிகர் மற்றும் ஆகுமண்டட் ரியாலிட்டி நுட்பத்தை அந்நிறுவன பணியாளர்கள்செய்து வருகின்றனர். மின்சார வாகனம் மற்றும் அதுசார்ந்த புதிய உத்திகளை ஃபோர்ட் அதிகளவில் செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, மெஷின் லர்னிங் ஆகியவை இந்தியாவில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன. சென்னையை மையப்படுத்தி மட்டும் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஃபோர்டு நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளிலும்முதலீடு செய்ய அந்நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கிளவுடு கம்பியூட்டிங் என்ற நுட்பத்தை மையப்படுத்தி பல்வேறு பணிகளை ஃபோர்ட் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. வாகன திருட்டு, சார்ஜிங் பிரச்னைக்கு தீர்வு காண்பது எப்படி உள்ளிட்ட அம்சங்களை நம்ம சென்னை டீம்தான் சிறப்பாக செய்து வருகிறது. இன்னும் வரும் ஆண்டுகளில் இந்த பணிகளை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.