ஃபுரூட்டி தயாரிப்பு நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு…
குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பார்லே ஆக்ரோ நிறுவனம் ஃபுரூட்டி, ஆப்பி ஃபிஸ் உள்ளிட்ட பிரபல குளிர்பானங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 12 மாதங்களாக 12%வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. Tofler என்ற நிறுவனம் இந்த தகவலை அளித்துள்ளது. 3 ஆயிரத்து 209 கோடி ரூபாய் வருவாய் கடந்த நிதியாண்டில் கிடைத்துள்ள நிலையில் அதற்கு முந்தயை ஆண்டு அதாவது 2023 மார்ச் 31 வரை 3 ஆயிரத்து 654 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 160.8 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதிக வரிவிதிப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதாவது 12 %வரியில் இருந்து 40 %ஆக வரி அதிகரிக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த பிரகாஷ் சவ்ஹான் குடும்பத்தினர் பார்லி ஆக்ரோவை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆலியாபட், வருண் தவான் ஆகிய இரண்டு பிரபலங்களும் இந்த பிராண்டின் விளம்பர தூதர்களாவர். இதே நிறுவனம், பாலை அடிப்படையாக கொண்ட ஸ்மூத் என்ற பிராண்டை அறிமுகப்படுத்தி ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு அதை விற்றனர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மது இல்லாத குளிர்பானங்களின் சந்தை 1.5டிரில்லியன் ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகை 60,000 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது இந்த வகை குளிர்பானங்களுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டியும், 12விழுக்காடு செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், வரியை குறைக்க வேண்டும் என்று அரசிடம் பல முறை கோரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர். எனினும் அரசு அதற்கு செவிசாய்த்ததாக தெரியவில்லை..