தங்கத்தில் அரசு எடுத்த அதிரடி முடிவு..

தங்க பண திட்டம் எனப்படும் கோல்ட் மானிடைசேஷன் ஸ்கீமை நிறுத்துவதாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்எல்டிஜிடி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி முதலே இந்த திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திட்டத்தின் சந்தை சூழல், அந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தங்க இறக்குமதியை குறைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டம். குறுகிய காலம், நடுத்தரம் மற்றும் நீண்டகாலமாக அரசாங்கத்துக்காக டெபாசிட் செய்ய வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏற்கனவே பணம் கட்டி முதிர்ச்சி தேதிக்காக காத்திருப்போருக்காக இந்த திட்டம் தொடர்ந்து இயங்கும் என்றும், ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டு இந்த திட்டம் செயல்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் தொடர்பான விரிவான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் தங்கத்தின் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.