ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலர் தொடும் தங்கம்.,,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் தொடர்பாக ஒரு சமநிலையற்ற சூழல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க டாலர்களில் விரைவில் 3 ஆயிரம் டாலர்களை தொடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை மேலும் 25% உயர்த்தும் முடிவை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதுடன், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அதனை அமல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பாவில் கடந்தாண்டு ஜூன் முதல் அந்நாட்டு மத்திய வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 6 ஆவது முறையாக கடந்த வியாழக்கிழமை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. அமெரிக்க வேலைவாய்ப்பு, மற்றும் விவசாயம் அல்லாத துறைகளின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அமெரிக்க வரி விதிப்புஒரு புறம் இருந்தாலும், அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை 13.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபரான டிரம்ப், கட்டணங்கள், வரிகளை உயர்த்தும் போக்கால் அந்நாட்டின் வளர்ச்சி நிச்சயம் குறையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பு குறியீடு 4 ஆவது நாளாக தொடர்ந்து வீழ்ந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, இந்தாண்டின் முதல் மாதத்தில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளன. குறிப்பாக முதல் மாதத்தில் 18 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்க ஈடிஎப் மீதான இன்வென்டரி 85.895 மில்லியன் அவுன்ஸ் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இத்தனை சமநிலையற்ற சூழலில் தங்கம் விரைவில் ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலர்களை வரும் வாரத்தில் தொட்டுவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.