இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு….

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், சீனாவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் குடியேறி வருகின்றன. டிரம்ப் கடந்த முறை பதவியில் இருந்த போது சீனாவுடன் வணிக யுத்தத்தில் ஈடுபட்டுவந்தார். வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து,மலேசியாவை ஒப்பிடும்போது இந்தியாதான் மிகச்சரியான இடமாக இருக்கும் என்ரு நிதி ஆயோக் அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. குறைவான வரி, மலிவான விலையில் பணியாளர்கள், சுதந்திரமான வணிக ஒப்பந்தங்கள் மேலே சொன்ன நாடுகள் முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடுகளாக இருக்கின்றன. ஆனால் அமெரிக்க கொள்கைகளுக்கு உகந்த இடமாக இந்தியாதான் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. அதிக வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டும் கலந்தே இருக்கும் என்று கூறும் நிபுணர்கள், இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வெளிப்படைத்தன்மையுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சீனாவுக்கு சரியான மாற்றாக இந்தியாதான் திகழ வேண்டும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர். வியட்நாமில் பணி ஆணைகளை பெறுவதில் சிக்கல் உள்ளது.