பிளே ஸ்டோர் பில்லிங்கை நிறுத்தியுள்ள கூகுள் நிறுவனம்..
ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய போட்டி ஆணையம் அண்மையில் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்தது. இந்த நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு பில்லிங்கை இந்தியாவில் கூகுள் நிறுத்தியுள்ளது. இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி கூகுள் நிறுவனம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டிராய்டு இயங்குதளத்தில் கூகுளின் மொத்த சூட்டையும் பயன்படுத்த நிர்பந்திப்பதாக வழக்குகள் நடைபெற்றன. இருவேறு வழக்குகளில் கூகுளுக்கு முதலில் ஆயிரத்து 338 கோடி ரூபாயும் அடுத்தடுத்த நாட்களில் மேலும் 936 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தில் புதிய ஆப்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் 15 விழுக்காடு தற்போது கூகுள் எடுத்துக் கொள்கிறது. 10 லட்சம் பேரை கடந்ததும்,வரும் வருவாயில் 30 விழுக்காட்டை கூகுள் நிறுவனம் எடுத்துக் கொள்கிறது. இதுவும் விவாதப் பொருளாகியுள்ளது.
இரண்டு வருட போராட்டத்துக்கு பிறகு செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதித்தது. இந்த சூழலில் போட்டி ஆணையத்தின் முடிவை எதிர்த்து கூகுள் நீதிமன்றத்தை நாட உள்ளது. நீதிமன்றத்தை கூகுள் நாடி வந்தாலும்,தற்காலிகமாக கூகுள் பிளேவிற்கென பில் வசூலிக்கப்படாதது, அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவோர் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.