22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சந்தைகள்செய்தி

இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…

விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது.

இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவாக பயண தூரத்துக்கு குறைந்தபட்ச தொகையாக 2,900-ஆகவும் அதிகபட்சமாக 8,800 ரூபாய் கட்டணமாகவும் வாங்கி வரப்பட்டது. இந்த நிலையில் கட்டணத்தை உயர்த்துவதில் அறிவிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு நடைமுறை நேற்றுடன் முடிந்தது.

அதாவது விமான கட்டணங்களை நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறும், சந்தையின் நிலவரத்திற்கு தகுந்தாற்போலவும் மாற்றி அமைத்து கொள்ளலாம். எனவே, இவ்வளவு நாட்களாக இருந்த விமான கட்டணங்களுக்கும், இனி இருக்கப் போகும் விமான கட்டணங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *