மத்திய அரசின் பலே திட்டம்..

வோடஃபோன் ஐடியா நிறுவனம் அலைக்கற்றை ஏலத்தில் கட்டவேண்டிய பணத்துக்கு ஈடாக வி நிறுவனத்தின் பங்குகளை 49 விழுக்காடாக மாற்ற மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. 36,950 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றை பணத்தை வி நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. வி நிறுவனத்தின் ஒரே பெரிய பங்குதாரராக மத்திய அரசு மாறியுள்ளது. 22.6விழுக்காடுக்கு பதிலாக இனி மத்திய அரசின் பங்கு 49 விழுக்காடாக இருக்கும். 3695 கோடி பங்குகளை 10 ரூபாய் முகப்பு மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு செபி இன்னும் ஒப்புதல் தரவில்லை. கடன்களை மத்திய அரசு ஈக்விட்டி பங்குகளாக மாற்றியுள்ள நிலையில், ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் வோடஃபோன் நிறுவனம் செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவைத் தொகைகளை அப்படியே தவணைகளாக கட்டஅரசு அனுமதிக்க வேண்டும் என்று வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அக்ஷய மூந்த்ரா கூறியுள்ளார். 16 மாதங்களாக வி நிறுவனத்துனட் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 2023-ல்தான் 16,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை ஈக்விட்டி பங்குகளாக மத்திய அரசு மாற்றிக்கொண்டது. கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் வி நிறுவனம், இன்னும் 12,000 கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. மொத்தமாக 2031 ஆம் ஆண்டு வரை 43,000 கோடி ரூபாயை வி நிறுவனம், மத்திய அரசுக்கு அளிக்கவேண்டியுள்ளது. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வி நிறுவனம் அளிக்க வேண்டிய கடன் தொகை 2,330 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்தாண்டில் இந்த தொகை 7,620 கோடி ரூபாயாக இருந்தது. 1.38 டிரில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள பணம் அலைக்கற்றைக்காக அந்நிறுவனம் செலவிட்டுள்ளது. செலவினங்களாக 69,020 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வி நிறுவனம் செலுத்தவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.