உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைக்கு கட்டுப்பாடுகள்..
பொதுத்துறை வங்கிகளில் உள்ள இயக்குநர்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. நிதி சேவைகளின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் தகுதி வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் , அதற்கான அளவுகோள்களை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2024 நிதியாண்டு முதல் இந்த புதிய திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. ரிட்டன் ஆஃப் அசெட்ஸ், வாராக்கடன் ஒன்றரை விழுக்காடுக்கும் கீழ் இருக்கவேண்டும், crar தொகை 200 அடிப்படை புள்ளிகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன. செயல்திறன், வணிகம், சொத்து நிர்வாகம், நிதி உள்ளடக்கிய வளர்ச்சி உள்ளிட்டவை இதில் அளவுகோள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்கேல் 4, அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் பிஎல்ஐ பெற தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். முழு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையும் ரொக்கப்பணமாகவே அளிக்கப்பட இருக்கிறது. ஒரே முறையில் மொத்த தொகையும் கிடைக்கும் வகையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட இருக்கிறது.