பல்வேறு சாதனங்களுக்கான பொதுவான சார்ஜர்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கான பொதுவான சார்ஜரை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று நுகர்வோர் விவகார அமைச்சக மூத்த அதிகாரி செவ்வாயன்று தெரிவித்தார்.
இந்தியாவில் பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கும், மின்-கழிவுகளைத் தடுப்பதோடு நுகர்வோர் மீதான சுமையைக் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
சமீபத்தில், ஐரோப்பிய ஒன்றியம் 2024 ஆம் ஆண்டுக்குள் சிறிய மின்னணு சாதனங்களுக்கான USB-C போர்ட் பொதுவான சார்ஜிங் தரநிலையை ஏற்றுக்கொள்வதை அறிவித்தது. அமெரிக்காவிலும் இதே போன்ற தேவை உள்ளது.
இந்த மாற்றத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்றால், அத்தகைய தயாரிப்புகள் இங்கே கொட்டப்படலாம் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
தற்போதுள்ள சார்ஜரின் போர்ட்கள் பொருந்தாததால், ஒவ்வொரு முறையும் புதிய சாதனத்தை வாங்கும் போது, தனி சார்ஜரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் நுகர்வோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.