டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்….
மாதந்தோறும் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
காணொலி மூலம் இந்த கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எல்ஈடி விளக்குகள்,சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது. எழுதும் மை,விளக்குகள்,உலோக பொருட்களுக்கு12 %-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது. அதேபோல் பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் விகிதமும் 0.25%-ல் இருந்து 1.5 %ஆக உயர்த்தப்பட்டது
ஜூன் மாதத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம்,ஆன்லைன் வீடியோகேம்,குதிரை பந்தயத்தின் மீதான வரியை உயர்த்தலாமா என்பது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனைகளை பெற்றிருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் கசினோ மற்றும் ஆன்லைன் கேமிங்கிற்கு ஜிஎஸ்டி வரியை உச்சபட்சமாக உயர்த்துவது குறித்து வரும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.