எத்தன நாள் இந்தியாவில் இருந்தீங்க…?
இந்தியா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களில் சிலருக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அளித்துள்ளது.
அதில் எத்தனை நாட்கள் இந்தியாவில் இருந்தீர்கள் என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்தால் வரிஏய்ப்பு நடந்ததா என்று விசாரணை நடத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
181 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் இந்தியாவில் அவர்கள் வசித்திருந்தார். வரியை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.2014 முதல் 2022-23 நிதியாண்டுகளில் இது போன்ற நோட்டீஸ்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தங்கியிருந்தால் அந்த விவரம் பதிவிடவேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரங்களை சில வெளிநாடு வாழ் இந்தியர்களால் பெற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் வசித்தோருக்கும் நோட்டீஸ்கள் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தவறான தகவல் அளித்திருந்தால், 2015ஆம் ஆண்டின் கருப்புப்பணச்சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு திருத்தி அமைக்கப்பட்ட சட்டத்தின்படி, 181 நாட்களுக்கு மாற்றாக, 120 நாட்கள் இந்தியாவில் இருந்தாலே அவர்கள் இந்தியாவில் வசித்தவர்களாகவே கருதி அவர்களுக்கு வரி விதிக்கப்படும். இந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாங்கப்போட்ட சொத்துகளுக்கு இந்தியாவில் வரி கட்டவேண்டும்.