மே 15-க்குள் பேடிஎம் பாஸ்ட்டேகை குளோஸ் எப்படி..
வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வாலட்கள், பேடிஎம் பேமண்ட் வங்கிகள் இயங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் பேடிஎம் பாஸ்ட்டேக்களை மூடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..
உங்கள் பேடிஎம் பாஸ்ட் டேக் கணக்கில் பணம் இருந்தால் வரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக வேறொரு நிறுவன பாஸ்ட்டேகை நீங்கள் வாங்குவது சிறந்தது. ஏற்கனவே பாஸ்ட்டேக் வைத்திருந்தால் அதில் உள்ள பணத்தை திரும்பத்தரும்படி நீங்கள் விண்ணப்பிக்கலாம். பேடிஎம் பாஸ்ட் டேக்கை மூட 5-7 நாட்கள் கூட ஆகலாம். பேடிஎம் பாஸ்ட் டேகை மூடினால் மட்டுமே நீங்கள் வேறொரு நிறுவன பாஸ்ட்டேகை பெற இயலும்.
1800 1204210 என்ற எண்ணில் அழைத்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள் உங்கள் பேடிஎம் பாஸ்ட் டேக் ஐடி இருக்கும், அதனை மூட வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை விடுத்தால் அதனை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி மூட ஏற்பாடு செய்வார், அதிலும் குறிப்பாக 5-7 நாட்கள் ஆகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். பேடிஎம் செயலி மூலமாகவும் இதனை செய்யலாம்.. பேடிஎம் கணக்கை லாகின் செய்யவும், பின்னர் பாஸ்ட் டேக் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும், அதில் மேனேஜ் பாஸ்ட்டேக் என்று இருக்கும், எந்த பாஸ்ட் டேக் கணக்கை மூட வேண்டுமோ அதை தேர்வு செய்து டீ ஆக்டிவேட் செய்யலாம். சில பயனர்களுக்கு அந்த ஆப்சன் இல்லாமல் இருக்கும் எனவே பேக் பட்டனை அழுத்தவும். அப்படி மூடும் ஆப்சன் இல்லாத பயனர்கள் கீழே ஹெல்ப் அண்ட் சப்போர்ட் என்று இருக்கும் அதில் நீட் ஹெல்ப் என்பதை தேர்வு செய்யவும்
அதில் 5-6 பிரிவுகள் இருக்கும், அதில் ஒன்றாக ஐ வாண்டு டு குளோஸ் மை பாஸ்ட் டேக் என்று இருக்கும், அதை தேர்வு செய்து கன்ஃபர்ம் செய்யுங்கள், அதற்கான காரணத்தை சொல்லுங்கள் இப்படி செய்தால் உங்கள் பேடிஎம் பாஸ்ட் டேகில் உள்ள பணம் உங்கள் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். அவ்வளவுதான்..