வரும் பட்ஜெட் எப்படி இருக்கும்???? நிதி அமைச்சர் தகவல்…
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்காத வகையில் அடுத்தாண்டு பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தனியார் அமைப்பின் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அடுத்தாண்டு பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பட்ஜெட் குறித்து தயாரிப்பு பணிகள் வரும் டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,பட்ஜெட் குறித்து இப்போதே பேசுவது மிகவும் முன்கூட்டியே பேசுவதாக அமையும் என்றுகருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் எரிபொருள், உரம் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வு சாதாரண பொதுமக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவின் பட்ஜெட் நாடாளுமன்ற வளாகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருவாய்க்கான வரி வரம்பு உயர்த்தப்படாமல் உள்ள நிலையில் வரும் பட்ஜெட்டிலாவது ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.