இதை பண்ணலேன்னா கடைய மூட வேண்டியதுதான் – எலான் மஸ்க்
பெரும்பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்கினார்.இந்த சூழலில் அதிக வருவாய் ஈட்டாவிட்டால் டிவிட்டர் நிறுவனம் திவாலாக அதிக வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.13 பில்லியன் டாலர் தொகையை மஸ்க் வங்கிகளில் கடன் பெற்று டிவிட்டரை வாங்கியுள்ளார், இந்த வங்கிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மஸ்க் உள்ளார்.பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்தால் டிவிட்டர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அளித்து வந்த சலுகைகளை மஸ்க் நிறுத்தியுள்ளார்…விளம்பரதாரர்கள் கணிசமாக குறைந்துள்ள நிலையில் அதில் இருந்து ஈடுகட்டும் வகையில் புதிய புளூ டிக் வசதியை பிரபலப்படுத்தி அதில் ஒரு நபரிடம் இருந்து 8 டாலர் வசூலிக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார்.கடுமையாக உழைத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று ஊழியர்களிடம் மஸ்க் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையாக உழைக்காவிட்டால் நிறுவனம் திவாலாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.