Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா

செய்தி

ஸ்விக்கி செய்த முக்கியமான நடவடிக்கை..

உணவு டெலிவரி செய்யும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விக்கி திகழ்கிறது. தொழிலை மேம்படுத்த தேவைப்படும்நிதியை ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் பெறும் முயற்சியில் இந்த நிறுவனம் உள்ளது. இந்நிலையில் அதன் தாய் நிறுவனமான bundl technologies pvt ltd நிறுவனத்தின் பெயரை ஸ்விக்கி பிரைவேட் லிமிட்டட் என்று அந்நிறுவனம் பெயர் மாற்றி பதிவு செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை ஸ்விக்கி நிறுவனம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றி பதிவு செய்திருப்பது இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் என்றும், ஸ்விக்கி என்ற பெயர் மக்கள் மத்தியில் எளிதாக சென்று சேரும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் பெயர் மாற்றத்துக்காக கடந்தமாதம் விண்ணப்பித்து இருந்தது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டும் வகையில் ஆரம்ப பங்கு வெளியீடுக்கு ஸ்விக்கி தயாராகி வருகிறது. அதில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்தே பங்குகளாக வாங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கான வரைவு ஆவணங்களை ஸ்விக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தை லாபகரமாக மாற்ற பல்வேறு உத்திகளையும் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் கைவசம் இருக்கிறதாம். 400 இடங்களில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமும் ஸ்விக்கியில் உள்ளதாம். ஸ்விக்கியின் வருவாய் மார்ச் 2023 வரை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அளவில் 45%உயர்ந்து 8265 கோடி ரூபாயாக இருக்கிறது. நஷ்டம் என்பது 15 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நந்தன் ரெட்டி ,ஸ்ரீஹர்ஷா மஜேட்டி ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனமே ஸ்விக்கி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஸ்விக்கியின் போட்டி நிறுவனமான சொமேட்டோ நிறுவனத்தின் வருவாய் 7,079 கோடி ரூபாயாக இருக்கிறது. இதன் உயர்வு 69 விழுக்காடாக இருக்கிறது. குருகிராமை அடிப்படையாக கொண்டு இயங்கும் சொமேட்டோ நிறுவனம் வெறும் 971 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது. இது கடந்த 2022 நிதியாண்டில் இருந்த 1222 கோடி ரூபாயைவிடவும் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *