நிதி கொள்கைக்கூட்டத்தில் முக்கிய முடிவு..
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்ததாஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெபோ வட்டி விகிதம் ஆறரை விழுக்காடாகவே தொடர்கிறதாம். கடந்தாண்டு பிப்ரவரியில் ரெபோ வட்டி வகிதிம் 6.25 விழுக்காட்டில் இருந்து ,6.5 %ஆக உயர்ந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல் இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டின் பாதியில் பணவீக்கம் குறையும் என்றும் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளர்ச்சி என்ற அடிப்படையில்தான் ரெபோ வட்டி விகிதம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பேமண்ட் கட்டமைப்புகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடன்களை குறைத்து புதிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதும் ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம் என்றும் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார். உணவுப்பொருட்கள் விலையேற்றம் என்பது பிரதான விலையேற்றத்தை கண்டிப்பாக பாதிப்பதாகவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். விலைவாசி உயர்வை 4 விழுக்காடுக்கு குறைவாக வைக்கவே மத்திய அரசு ரிசர்வ் வங்கியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.