73 ஆயிரத்து 500 கோடி வசூலித்த வருமான வரித்துறை..

வருமான வரித்துறை இதுவரை 73 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது . இதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கார்ப்பரேட் வரி என்றும் மீதம் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு தனிநபர் வருமான வரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் வெளிநாட்டு சொத்துகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.. நடப்பு நிதியாண்டில் இதுவரை 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி கிடைத்திருப்பதாக அந்த துறை தெரிவித்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து நிலுவைத் தொகையை கணக்கிடுவதில் பெரிய சிக்கல் நிலவுவதாக வருமானவரித்துறை தெரிவிக்கிறது. கடந்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை மட்டும் 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானவரித்துறைக்கு நிலுவைத் தொகை உள்ளதாக அந்த துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவே கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 15 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிலுவையில் உள்ள தொகையை எளிதாக வசூலிக்க முடிவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 37 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவிக்கின்றனர். 2003-நான்காம் ஆண்டுகளில் இருந்து வரி செலுத்தாமல் உள்ளோரை மோசடி செய்தவர்களாக கருதி அந்த துறை நடவடிக்கை எடுத்து வருகிறது . சிலரின் விவரங்கள் கணினியில் இல்லாததால் அவர்களைப் பிடித்து அதனை சரி செய்யும் நடவடிக்கையிலும் வருமானவரித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.