விடாமல் விசாரிக்கும் வருமான வரித்துறை..

பங்குகளை வாங்கி விற்கும் புரோமோட்டர்கள் மற்றும் அவர்களின் துணையானவர்கள் வாங்கி வைத்திருக்கும் பட்டியலிடப்படாத பங்குகள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆபர்ஸ் ஃபார் சேல் எனப்படும் OFS வகையில் பட்டியல் இடும்போது சலுகைகள் அளிப்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்கின்றனர். கடந்த 10 நாட்களாக புரோமோட்டர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். சில முதலீட்டாளர்கள் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு அதிக விலை கொடுத்து எப்படி பங்குகளை வாங்கினார்கள் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாராக இல்லாமல், இந்த பங்குகளை வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு முன்பு வங்கியிருந்த பங்குகள் குறித்தும், அந்த பங்குகள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக வருமான வரிச்சட்டத்தின் சில அம்சங்கள் அதிக தொகை குறித்து வாங்கப்பட்டிருந்தால் அதற்கான வரி முறையாக செலுத்தப்பட்டதா, பணவீக்க மதிப்பு உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்படும். உரிய வரி செலுத்தாதபட்சத்தில் வரியை வட்டியுடன் செலுத்த புதிய வசதி தேவை என்கிறார்கள் கணக்கு தணிக்கையாளர்கள்.நீண்டகால ஆதாய வரியாக அண்மையில் 12.5 விழுக்காடு முதல் 20 விழுக்காடாக வரி உயர்த்தப்பட்டுள்ளது.