அடுத்த ஆண்டு முதல் எத்தனால் கலந்த பெட்ரோல்??!!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியா 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை வழங்கும் என்றும் அத்துறையின் அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் பானிபட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள இரண்டாம் தலைமுறை எத்தனால் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையானது எண்ணெய் இறக்குமதி சார்ந்திருப்பதை குறைத்து, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
20 சதவீத எத்தனால் கொண்ட பெட்ரோலில் இருந்து ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் சேமிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதம் தொடங்கிய நடப்பு நிதியாண்டு 2020-21 முதல் மூன்றரை மாதங்களில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மாற்றப்பட்டது.
புதன்கிழமை உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி, தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பானிபட்டில் 2வது தலைமுறை (2ஜி) எத்தனால் ஆலையை அர்ப்பணித்தார்.
ஆலையை திறந்து வைத்து பேசிய பிரதமர், இந்த திட்டம் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான கிரீன்ஹவுஸ் வாயுக்களின் குறைப்புக்கு பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.