ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு?
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து வந்ததால் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயராமல் உள்ளது.
தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உடனே ஏறாமல் போனாலும், இந்திய அரசின் கீழ் உள்ள 3 பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம்,இந்தியன் ஆயில் மற்றம் ஹிந்துஸ்தான் பெர்டோலியத்துக்கு நேரடியாக லாபம் குறையும்.
இதனை ஈடு செய்ய பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவும் கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்ற சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் கடந்த மே மாதம் 109.51 டாலராக இருந்தது. தற்போது இந்த தொகை சராசரியாக 90.29 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.