தொடர்ந்து அசத்தும் இந்திய சந்தைகள்
செப்டம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சம் தொட்டன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 83,184 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 25,415புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. வங்கித்துறை பங்குகள் மற்றும் FMCG துறை பங்குகள் ஏற்றம் கண்டன. அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி, தனது ரெபோ வட்டி விகிதத்தை குறைக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பியுள்ளதால் அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன. NTPC, Kotak Bank, Titan, Nestle India, Hindustan Unilever, HDFC Bank ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த லாபத்தை பதிவு செய்தன. Adani Ports, L&T, TCS ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன. ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், பொதுத்துறை வங்கி ஆகிய துறை பங்குகள் சுமார் 2.45 %வரை சரிவை கண்டன. AAA Technologies Ltd, Aarnav Fashions Ltd, Jubilant FoodWorks Ltdஉள்ளிட்ட 241 நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சசத்தை எட்டின. செப்டம்பர்19ஆம் தேதி வியாழக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 54ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 25 ரூபாய் குறைந்த தங்கம் 6 ஆயிரத்து 825 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 96 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 96 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்