22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

லேசான உயர்வுடன் முடிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்90புள்ளிகள் உயர்ந்து 83,079 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி34 புள்ளிகள் உயர்ந்து 25,418புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. டெலிகாம், ஆட்டோமொபைல்,கட்டுமானத்துறை பங்குகளில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், கடன்கள் மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகளை குறைக்க முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலால் இந்த ஏற்றம் நடந்துள்ளது. மொத்தம் 1616பங்குகள் லாபத்தையும், 2176 நிறுவன பங்குகள் நஷ்டத்தையும், 99 நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் இன்றி வர்த்தகம் நிறைவுற்றது. செப்டம்பர்17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 54ஆயிரத்து920 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்த தங்கம் 6 ஆயிரத்து 865 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலைகிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 97 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் குறைந்து 97 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *