லேசான உயர்வுடன் முடிந்த இந்திய சந்தைகள்
செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்97 புள்ளிகள் உயர்ந்து 82,988 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி27 புள்ளிகள் உயர்ந்து 25,356புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. NTPC, JSW Steel, Hindalco Industries, Shriram Finance, L&Tநிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன, Bajaj Finance, HUL, Bajaj Finserv, SBI Life Insurance,Britannia Industries ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. எப்எம்சிஜி, டெலிகாம் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் லாபத்தில் வர்த்தகத்தை முடித்தன. குறிப்பாக வங்கித்துறை, ஆற்றல், ஊடகம், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 0.4 முதல் 1% வரை உயர்வை கண்டன. Jubilant Ingrevia, LTIMindtree, Maharashtra Scooters, MCX India, Radico Khaitan, Shriram Finance, Shyam Metalics, Sun Pharma, Tech Mahindra, Bajaj Finserv, Biocon, Dixon Technologies, Galaxy Surfactants, Godfrey Phillips, HCL Technologies, JM Financial, JSW Steel உள்ளிட்ட 380 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. செப்டம்பர்16ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 55ஆயிரத்து40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் 15 ரூபாய் உயர்ந்த தங்கம் 6 ஆயிரத்து 880 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலைகிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 98 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் அதிகரித்து 98 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.