உச்சம் தொட்ட இந்திய சந்தைகள்..
செப்டம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து 559 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42புள்ளிகள் உயர்ந்து 25ஆயிரத்து278புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. Bajaj Finserv, Bajaj Finance, HCL Technologies, Bajaj Auto, Hero MotoCorp ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Grasim Industries, Kotak Mahindra Bank, Adani Enterprises, Coal India, Nestle India ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. வங்கி, எப்எம்சிஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. உலோகத்துறை, சந்தை மூலதனம், சுகாதாரத்துறை, டெலிகாம் உள்ளிட்ட துறை பங்குகள் 0.4 முதல் 1.6% வரை சரிவை கண்டன். Bajaj Finserv, Bajaj Holdings, Bharti Airtel, Colgate Palmolive, Godrej Industries, Gujarat State Petronet, Gujarat Gas, HCL Technologies, HPCL, Indraprasta Gas, Infosys, ITC, Kalyan Jewellers, Lupin, M&M Financial, Persistent Systems, Pfizer, PI Industries, Piramal Pharma, Radico Khaitan, Sun Pharma, TCS, TVS Motor, UNO Minda உள்ளிட்ட 300க்கும் அதிகமான நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டன. செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி திங்கட்க்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து , ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 670 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 360 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 1ரூபாய் குறைந்து 91ரூபாய் ஆக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் குறைந்து 91 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும்.