Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கையை மீறி சென்ற இந்தியாவின் பணவீக்கம்..

இந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49%ஆக உயர்ந்து 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
காய்கனிகள் விலை உயர்வு இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது பணவீக்க வரம்பாக 4% அளவை வைத்துள்ள நிலையில் கடந்த ஜூலைக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கியின் மதிப்பை விட அதிகமாகியுள்ளது. 2விழுக்காடு முதல் 6% என்ற அளவில் பணவீக்கம் இருந்தால் சமாளிக்க இயலும் என்று கூறும் ரிசர்வ் வங்கி, கடந்த ஆகஸ்ட்டில் கிராமபுற விலைவாசி ஏற்றம் 4.16%ஆக இருந்த நிலையில் தற்போது இது 5.87% ஆகியுள்ளது. நகர்புற பணவீக்கம் ஆகஸ்ட்டில்3.14 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது இது 5.05% ஆக உயர்ந்துள்ளது. காய்கறி விலை மட்டும் ஆகஸ்ட்டுக்கு பிறகு 35.99% உயர்ந்துள்ளது. பருப்பு மற்றும் அது சார்ந்த பொருட்கள் விலையும் 9.81%அதிகரித்துள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலைகள் உயர்வும் அதில் குறிப்படத்தக்கது. மேலும் சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகளால் சமையல் எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஹவுசிங் சார்ந்த பணவீக்கம் 2.78% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகள் குறித்த பணவீக்கம் 2.71% ஆக செப்டம்பரில் தொடர்கிறது. சிறப்பான பருவமழை காரணமாக உணவு உற்பத்தி அதிகரித்து விலைவாசி உயர்வு குறையும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கிக்கு எழுந்துள்ள பெரிய சவாலாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *