ரூ.7500 கோடி பற்றி ஐ.டி. விசாரணை..
இந்தியாவில் திருமணங்களில் பணப்புழக்கத்துக்கு பஞ்சமே இல்லை. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் முதல் பல பணக்காரர்கள் கோடிகளில் செலவு செய்கின்றனர். இந்த நிலையில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த திருமண அமைப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 7500கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணம் கைமாறியது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. போலி ரசீது, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் போலி பில் கும்பல் இயங்குவதாக கூறப்படுகிறது.வெளிநாடுகளில் நடத்தப்பட்ட திருமணங்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நபர்கள் வாங்கும் பணத்திற்கு முறையான கணக்குகளும் சில நேரங்களில் இருக்காது என்பதால் அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். வெளிநாடுகளில் சென்று பிரமாண்ட திருமணங்கள் செய்வதில் ஏராளமான சிக்கல்களும் உள்ளன. ஒரு பிரபல மார்பிள் வியாபாரியின் வீட்டுத் திருமணத்தில் வெளிநாட்டுக்கு செல்ல தயாரான உறவினர்கள் நண்பர்களிடம் பான் கார்டும் கேட்கப்பட்டதால் அந்த திருமண திட்டமும் அண்மையில் ரத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியது. எல் ஆர்எஸ் விதிப்படி பணம் செலவாகிறதா என்று வருமான வரி அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். வெளிநாட்டில் இந்திய ப்பணம் செலவு செய்தால் அதற்கு கூடுதல் வரியும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.