இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி உயர்வு :
இந்தியாவின் சேவைத்துறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20.2 விழுக்காடு அதிகரித்து 23.26பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு, ஜூன் மாத எண்ணிக்கையை விட குறைவாகும் . ஏனெனில் கடந்த ஜூனில் 25.29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக ஏற்றுமதி இருந்துள்ளது.
ஏற்றுமதி அதிகரித்துள்ள இதே வேளையில், இறக்குமதியில் கூட உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூலையில் இறக்குமதி 22.3% உயர்ந்து 13.92 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 94.75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகவும், இறக்குமதி 58.94 பில்லியன் டாலர் ஆகவும் உள்ளது.