இந்தியாவின் வணிக பற்றாக்குறை அதிகரிப்பு
மத்திய அரசு மாதந்தோறும் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத புள்ளி விவரம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரவுகள் படி, நாட்டின் மொத்த இறக்குமதி 37%உயர்ந்துள்ளது.
இந்த அளவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இருமடங்கு அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 450பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருக்கும் என கருதப்படுகிறது
குறிப்பாக துறை வாரியாக ஒப்பிடுகையில். ஆகஸ்டில் அதிகபட்சமாக கச்சா எண்ணெய் தான் 86.44%உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் அதே நேரம் தங்கத்தின் இறக்குமதி, 47.54%குறைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை ஜூலை மாதத்தில் 28.7%ஆக இருந்தது. தற்போது இது மேலும் 4.4%உயர்ந்துள்ளது.
நிதியாண்டு துவக்கம் முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் ஏற்றுமதி 192.59பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இறக்குமதி 317.81 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 53.78பில்லியன் டாலர் ஆக இருந்தது. இந்த அளவு, முதல் 5மாதங்களில் 125.22பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் முடிவில் மொத்த ஏற்றுமதி 450பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயரும் என வர்த்தக செயலாளர் சுப்பிரமணியன் கூறினார்.