வாரன் பஃபெட் லெட்டரால் இந்தியாவில் முதலீடு???
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த கடிதம் உலகளவில் பெரிய கவனம் பெற்று வருகிறது. சார்லி மங்கரை பற்றியும் அதில் வாரன் குறிப்பிட்டு பேசியிருந்தார். மங்கரின் வெற்றிடம் குறித்தும் வாரன் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தில் உலக பொருளாதாரம் குறித்தும் அமெரிக்க சட்டம் குறித்தும் வாரன் சந்தேகம் தெரிவித்திருந்தார். வாரனின் இந்த கருத்துகள் பல நிதி சார்ந்த நிருபர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. முதலீடு செய்யும்போது கவனமாக செய்ய வாரன் அறிவுறுத்தியிருந்தார். தற்காலிக சந்தைகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் நீண்டகால மதிப்பு மற்றும் அதன் அடிப்படை குறித்தே கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாரன் குறிப்பிட்டார். அவ்வப்போது லாபம் வரும் என்று குறுகிய காலத்தில் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் இரையாகக் கூடும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வாரன் பஃப்பெட் குறிப்பிட்டிருந்த சூழல் இந்திய சந்தைகளுக்கும் மிகச்சரியாக இருப்பதாக இந்திய சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறு மற்றும் நடுத்தர ரக சந்தைகள் குறித்து செபியின் கணிப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்க செபி முயற்சித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏராளமானோர் வெற்றிபெற்றுள்ள நிலையில் பல போலிகளும் இடம்பெற்றிருப்பது மறுப்பதற்கு இல்லை. முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் தரமான முதலீடு செய்யவேண்டும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.