முதலீட்டாளர்களுக்கு ரூ.6லட்சம் கோடி லாபம்..

திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றபட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டது.வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காணப்பட்டது.காலையில் ஏற்பட்ட முன்னேற்றம் நாள் முழுவதும் நீடித்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 855 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 408 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 274 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 125 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தது. டெக் மஹிந்திரா, டிரென்ட் உள்ளிட்ட நிறுவனபங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எல்ஐசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன.வங்கி, நிதித்துறை, ஆட்டோமொபைல் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் தலா 2 விழுக்காடு லாபத்தை பதிவு செய்தன. கடந்த 5வர்த்தக நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுசெய்தவர்களுக்கு 32லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் திங்கட்கிழமை ஒரு கிராம் தங்கம் வரலாற்றிலேயே இல்லாத வகையில், 9ஆயிரத்து 15 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 11 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்…