முதலீட்டாளர்களுக்கு ரூ. 4.92லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 4லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து64புள்ளிகள் வீழ்ந்து 80 ஆயிரத்து 684 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 336 புள்ளிகளிலும் வணிகம் நிறைவுற்றது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பை ஒட்டி முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்தனர். ஐடிசி மற்றும் சிப்லாநிறுவன பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிந்தன. Shriram Finance, Bharti Airtel, Grasim Industries, Hero MotoCorp, JSW Steel ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன ஆட்டோமொபைல், வங்கி, ஆற்றல், உலோகம் , எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை விலை சரிந்தன. Oberoi Realty, Max Healthcare, Kaynes Technologies, Coforge, Indian Hotels, 360 ONE WAM, Paytm, Persistent Systems, Caplin Labs உள்ளிட்ட 270க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.