போரால் தாக்கம் பெரிதாக இருக்காதாம்..
இஸ்ரேல் மீது 7 நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்படுகின்றன. இந்த நிலையில் ஜி குவாண்ட் இன்வெஸ்டெக் நிறுவனத்தின் சங்கர் சர்மா என்பவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த சங்கர், தற்போதைய சூழலில் போர் மட்டுமே காரணம் இல்லை என்றும், சீனாவில் பங்குச்சந்தைகள் பெரிய அளவில் ஏற்றம் காணப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் அந்த பக்கம் செல்வதுதான் காரணம் என்று கூறியுள்ளார். பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் இருக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் சரிவுகள் இருக்கும் என்று சங்கர் கூறுகிறார். இறுதியில் பங்குச்சந்தைகள் ஏற்றம் மட்டுமே காண முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த 2-3 ஆண்டுகளாக இந்திய ஈக்விட்ட சந்தைக்கு போட்டியாக எந்த நாட்டு பங்குச்சந்தைகளும் இல்லாத நிலையில் , தற்போது சீனாவில் பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிது. 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தை மூலதனம் பெறப்பட்டுள்ளது சாதாரண விஷயம் அல்ல என்றும், தற்போதைய சூழலில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவு என்பது தற்காலிகமானதுதான் என்றும், பெரிய அளவுக்கு வணிகமே இல்லாத பல நிறுவனங்கள் கடந்த 1996 முதல் பங்குச்சந்தைக்கு வந்துள்ளதாக சாடும் சங்கர், முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக மாறிவிட்டனர் என்று பெருமிதம் தெரிவித்தார்.