பாலிசி பசாருக்கு நோட்டீஸ்..
இந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்த IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல பாலிசி நிறுவனமான பாலிசி பசாருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென பாலிசி பசார் நிறுவனத்துக்கு ஐஆர்டிஏஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது விதிப்படி முறையான ஆவணங்களை பாலிசி பசார் நிறுவனம் வைத்திருக்க வில்லை என்று கூறப்படுகிறது. போதுமான அளவுக்கு சரி செய்யும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தற்காப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் ஐஆர்டிஏஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அறிக்கையையும் பாலிசிபசார் நிறுவனம் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐஆர்டிஏஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். உரிய ஆவணங்கள்,சில பாலிசிகளின் ரிட்டனர்ஸ் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையையும் ஐஆர்டிஏஐ கோரியுள்ளது. ஒழுங்குமுறை அமைப்பே அறிவுறுத்திய நிலையில் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாலிசி பசார் நிறுவனம் இறங்கியுள்ளது.
காப்பீடுகளை குறைந்த விலையில் அளித்து வந்த பாலிசி பசார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வும், அதைத் தொடர்ந்து பாலிசிபசார் எடுத்த தற்காப்பு நடவடிக்கைகளும் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளன.