கோ ஃபர்ஸ்ட்டை வாங்குகிறதா ஸ்பைஸ் ஜெட்..?
அமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால் திவாலாகிப்போனதாக கூறப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புரோமோட்டரான அஜய் சிங் மற்றும் பிசி பீ நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கோ-பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் ஸ்பைஸ் ஜெட் பார்ட்னர் சேவையை இயக்குவோம் என்று தெரிவித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் இணைந்தால் பழையபடி கோஃபர்ஸ்ட் நிறுவனம் றெக்கை கட்டி பறக்கும் என்று கூறப்படுகிறது.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே 100 ஏர்பஸ் நியோ ரக விமானங்கள் வாங்க ஆர்டர்கள் அளிக்கப்பட்டன.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்கு 70.6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது கடந்த நாட்களை விட 11 விழுக்காடு அதிகமாகும்.
கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் திடீரென கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் அறிக்கையை சமர்ப்பித்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டுமின்றி ஷார்ஜாவைச் சேர்ந்த ஸ்கை என்ற நிறுவனமும், ஆப்ரிகாவை மையப்படுத்தி ஓடும் சஃப்ரிக் நிறுவனமும் முன்பு கோ ஃபர்ஸ்ட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டன. அண்மையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 15 விழுக்காடு பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ஊழியர்கள்சிலருக்கும் சம்பளத்தை தாமதம் செய்தது. தற்போது வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி 250 விமானங்களை இயக்கி வருகின்றது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் 48 இடங்களுக்கு விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. போயிக்737மேக்ஸ், போயிங் 700 மற்றும் கியூ400எஸ் ஆகிய விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.