வட்டி வாங்கும்போது நல்லா இருந்தது…. இப்ப கஷ்டமா இருக்கு…
இந்தியாவில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் வங்கிகள் சாதாரண மக்கள் செலுத்தும் டெபாசிட்டில்
கிடைக்கும் பணத்தை வைத்து அதிக லாபம் ஈட்டி வந்தன, இந்நிலையில் வரும் காலாண்டுகளில் வங்கிகளுக்கான லாபம்
குறைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் மாற்றப்படுகிறது அடுத்தாண்டு இதற்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. வங்கிகளில் அதிக தொகைகளை டெபாசிட் செய்வோர் அளவு குறைந்து பலரும் பல்வேறு வகைகளில் முதலீடுகளாக மாற்றி வருகின்றனர். அவர்களை தக்கவைக்க வங்களுக்கு சிக்கல் மேலும் அதிகமாகும் என கணிக்கப்படுகிறது
இது குறித்து கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக்,கூறும்போது, திடீரென வாடிக்கையாளர்கள்
டெபாசிட் கணக்குகளை பிரித்து வேறு சில முதலீடுகளாக மாற்றி வருவதால், சேமிப்புக்கணக்குகளில் பெரிய பாதிப்பு
உண்டாகியுள்ளது என்றார். இதனை கருத்தில் கொண்டு பாரதஸ்டேட் வங்கியிலும் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி அதிகம் கிடைக்கும் என வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, நிலைமை இப்படி இருக்க ஒரே மாதத்திற்குள் இரண்டாவது முறையாக எச்டிஎப்சி வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் உள்ள டெபாசிட்களுக்கு வட்டிகளை உயர்த்தியுள்ளது பண்டிகை காலம் கிட்டத் தட்ட முடிவுற்ற நிலையில் டெபாசிட்கள் இதற்கு பிறகு பெரிய அளவில் இல்லாமல் போக வாய்ப்புள்ளதால் இந்தியாவில் லாபகரமாக இயங்கி வந்த வங்கிகள் வருவாய் இழப்பை சந்திக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.