22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சந்தைகள்செய்தி

உச்சம் பெற்ற ஐடிசி பங்கு

சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய உச்சமாக ஐ டி சி பங்கு விலை 320ரூபாய் 20காசுகள் ஆக உயர்ந்துள்ளது..

மேலும் இந்த பங்கு, சந்தை மதிப்பு அளவில் 4 லட்சம் கோடியாக ஏற்றம் பெற்றுள்ளது.

ITC நிறுவன பங்குகள் கடந்தாண்டு மட்டும் 53.54%வளர்ச்சியும். இந்தாண்டு இதுவரை 47.58விழுக்காடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நிப்டியில் சிறந்த பங்குகள் பட்டியலில் ஐடிசியும் இணைந்துள்ளது . கடந்த ஜூன் மாதத்தின் 30 ம் தேதி வரை முடிந்த காலாண்டில் ITC நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை 19ஆயிரத்து 831புள்ளி 27 கோடியாக உள்ளது. இந்த அளவு கடந்தாண்டை விட 39.29%அதிகமாகும்.

அந்நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 4,462.25கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *