இந்தியர்கள் இறங்கி அடிக்கும் நேரமிது…..
தண்ணீர்,உப்பு முதல் ஆகாய விமானங்கள் வரை எல்லா துறைகளிலும் வல்லவர்களாக உள்ள தொழில் ஜாம்பவான் நிறுவனம் இந்தியாவில் உண்டு என்றால் அது நிச்சயம் டாடா குழுமத்துக்கு முக்கிய இடம் உள்ளது. இந்த பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆளும் முக்கிய நபர் நடராஜன் சந்திரசேகரன், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன், அண்மையில் இந்தியாவின் பலதுறை முன்னேற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். டிஜிட்டல்,சப்ளை துறைகளில் இந்தியா பிற நாடுகளைவிட பல ஆண்டுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உலகளவில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை கூட இந்தியாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித்த தரும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாதான் அட்டகாசமான திறமைகளை கொண்டுள்ள நாடாக திகழ்வதாக பாராட்டியுள்ள அவர்,அடுத்த 20,30 ஆண்டுகள் நமக்கானது என்றார். பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதும் மக்களுக்கு இதுவே சிறந்த தருணம் என்றும் சந்திரசேகரன் நம்பிக்கையூட்டினார். பணம் சம்பாதிக்க மட்டும் நிறுவனங்களை தொடங்கினால் வளர்ச்சி இருப்பது போல தோன்றும் ஆனால் அது ஆரோக்கியமாக நெடுநாட்களுக்கு இருக்காது என்று கூறிய அவர், சரியான தொழிலில்,சரியான அணியிடம் அளித்தால், நிறுவனம் நீண்டகாலத்துக்கு சரியான வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளார்.