டிஜிட்டல் விசாவை அறிவித்தது ஜப்பான்..
டிஜிட்டல் துறையில் வேகமாக வளர்ந்து வருவோருக்கு 6 மாதங்கள் வரை விசா வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மதிப்பில் 68,300 டாலருக்கும் அதிகமாக சம்பாதிப்போருக்கு இந்த விசா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விசா முறை வரும் மார்ச் மாத இறுதியில் இருந்து அமலாக இருக்கிறது. 49 நாடுகள் மற்றும் மாகாணங்களில் உள்ளோர் இதற்கு தகுதியானவர்களாவர். வெவ்வேறு நாடுகளில் வீட்டில் இருந்து பணியாற்றி வருவோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களுக்கும் குறுகிய விசா அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சுகாதார காப்பீடு, விசா உள்ளிட்டவையும், பணியாளரின் மனைவிகள், குழந்தைகளும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாமாம். டிஜிட்டல் துறையில் பணியாற்றுவோரின் பொருளாதாரம் 787 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஏற்கனவே தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகள் டிஜிட்டல் துறையில் உள்ளோருக்கு விசா அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்கொரியாவில் பணியாற்ற 2 ஆண்டுகளும், தைவானில் 3 ஆண்டுகள் வரையும் பணியாற்ற இயலும். ஏற்கனவே சிலர் இந்த வகை நோமாட் விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். புதிய வகை விசாக்களால் சுற்றுலாத்துறையும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.