ஜியோவின் கூட்டு நிறுவனத்தில் அதிகரிக்கும் முதலீடு.,

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும்-பிளாக் ராக் நிறுவனமும் இணைந்து 66.5 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டை கூட்டு நிறுவனமான ஜியோ பிளாக்ராக்கில் செய்திருக்கிறார்கள்.இந்த கூட்டு நிறுவனத்தில் இதுவரை 84.5 கோடி ரூபாய் பணத்தை இரண்டு நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றனர். கடந்தாண்டு ஏப்ரலில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் பிளாக் ராக் நிறுவனமும் பிளாக்ராக் அட்வைசர்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனத்துடன் சரிபாதி கூட்டு நிறுவனத்துக்கான ஒப்பந்தம் செய்தனர். சொத்து நிர்வாகம் மற்றும் தரகு தொழில் இந்த கூட்டு நிறுவனத்தின் பிரதான சேவையாகும். டிஜிட்டல் முறையில் இந்த நிறுவனம் கடன் அளிக்க முன்வந்துள்ளது. இந்த கூட்டு நிறுவனம் மட்டுமின்றி, ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் 35% சரிவை கண்டுள்ளது. 2025-ல் மட்டும் அந்த நிறுவன பங்குகள் மேலும் 24%சரிந்துள்ளன. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிகர லாபமாக 295 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 294 கோடி எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. கடந்த 25 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் மட்டும் அந்த நிறுவனம் 438 கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாயை ஈட்டியுள்ளது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 57% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில்தான் அந்நிறுவனம் மிகப்பெரிய சரிவை கண்டது. கடந்த ஜூலை-செப்டம்பர் இடையேயான காலகட்டத்தில் அந்த நிறுவனம் 693 கோடி ரூபாய் பணத்தை வருவாயாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.