ஆட்டம் ஆரம்பம்!!!
44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி ஒருவாரம் கடந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கோடிகளில் சம்பளம் பெற்று வந்த மூத்த நிர்வாகிகளை மஸ்க் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இந்த சூழலில் டிவிட்டரில் பணியாற்றி வந்த மற்ற பணியாளர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக
மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதில், நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலும் அலுவலகத்துக்கு வந்துவிட்டிருந்தாலும், நீங்கள் தயவு செய்து வீட்டுக்கு செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கையாக டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் ஆட்குறைப்பு செய்வதை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்கியுள்ளார். பிரபல செய்தி நிறுவனமான புளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி 50 விழுக்காடு வரை பணியாளர்களை டிவிட்டர் நிறுவனம் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் நிறுவனத்துக்கு 1 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் உள்ள டிவிட்டர் அலுவலகங்களை மூடவேண்டும் உள்ளிட்ட பட்டியலையும்
மஸ்க் பட்டியலிட்டுள்ளார். மேலும் தற்போது நடைமுறையில் உள்ளஎங்கிருந்து வேண்டுமானாலும்
பணியாற்றும் விதியை மஸ்க் மாற்றியமைக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது