மணப்புரம் நிதி நிறுவன பங்குகள் சரிவு..
இந்தியாவில் பிரபல நிதி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது மணப்புரம் நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் 15 விழுக்காடு சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு பங்கின் விலை 150.73 ரூபாயாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி அறிவித்த வரம்பைவிட அதிக தொகையில் வட்டி வசூலிப்பதால் ஆசிர்வாத் நுண் கடன், மணப்புரம் நிதி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வரும் 21 ஆம் தேதிக்கு பிறகு கடன் வழங்குவதை குறிப்பிட்ட நிறுவனங்கள் நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட நிறுவனங்களில் கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் ரிசர்வ் வங்கி சாடியுள்ளது. பல முறை எச்சரித்த பிறகும் தமிராகவே நடந்துகொண்டதை அடுத்தே ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் புதிய கடன்களை வழங்கக்கூடாது என்று ஆசிர்வாத் மற்றும் மணப்புரம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.