சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்
வெள்ளியன்று சென்செக்ஸ் 60,000-ஐத் தாண்டியதன் மூலம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது.
முன்னதாக சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் குறைந்து 59,646.15 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் அதிகபட்சமாக 60,411.20 ம் குறைந்த பட்சமாக 59,474.57 ஐயும் இன்ட்ரா டே வர்த்தகம் தொட்டது.
இதன் காரணமாக வங்கி, வாகனம், நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், நிஃப்டி 50 198.05 புள்ளிகள் குறைந்து 17,758.45 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் இன்ட்ராடே அதிகபட்சமாக 17,992.20 ம் குறைந்தபட்சமாக 17,710.75 ஆகவும் இருந்தது.
டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 79.6725 ஆக இருந்த அதன் முந்தைய முடிவோடு ஒப்பிடும்போது வெள்ளியன்று ரூபாய் 79.7750 ஆக முடிந்தது.
இந்த மாதத்தின் 19 நாட்களில், பங்குச் சந்தையில் எஃப்.பி.ஐ.க்கள் மிகப்பெரிய அளவில் ₹44,481 கோடியை குவித்துள்ளன.