பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..
ஜனவரி 9 ஆம் தேதி இந்திய சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்ந்து 71,386 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 21,544 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. கடைசி நேரத்தில் பங்குதாரர்கள் பங்குகளை வாங்கியதால் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. வங்கித்துறை பங்குகள் கடைசி நேரத்தில் அதிகம் வாங்கப்பட்டன. இதேபோல் ஆட்டோமொபைல் துறைக்கும் தேவை அதிகரித்தது. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 2.52%பங்குகள் உயர்ந்தன. இதேபோல் நிஃப்டி சுகாதாரத்துறை பங்குகள் 1 விழுக்காடு உயர்ந்தன. ஊடகத்துறை பங்குகள் 3.32விழுக்காடு சரிவை கண்டன. ஹூரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகள் பெரிய அளவில் ஏற்றத்தை கண்டது. 2.88விழுக்காடு உயர்ந்த இந்த நிறுவன பங்குகள் தினத்தின் அதிகபட்ச லாபத்தை பதிவு செய்தது. அதானி போர்ட்ஸ், பாரத ஸ்டேட் வங்கியின் காப்பீடு, அதானி என்டர்பிரைசர்ஸ் , அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன பிரட்டானியா நிறுவனத்தின் பங்குகள் 1.22% சரிந்தன. bajaj finser, Nestle, HDfc life insurance நிறுவன பங்குகள் சரிந்தன. 2243 நிறுவன பங்குகள் லாபத்தையும், 1602 நிறுவன பங்குகள் நஷ்டத்தையும், 99 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகத்தை முடித்தன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5820 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாயாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.