செந்நிறத்தில் முடிந்த சந்தைகள்…
ஜனவரி 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 801 புள்ளிகள் சரிந்து 71,139 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் 215 புள்ளிகள் சரிந்து 21,522 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. நேற்று உயர்ந்து முடிந்த சந்தைகள், சந்தைகள் துவங்கிய சில நிமிடங்களிலேயே சரிவை சந்தித்தன. Bajaj Finance, Titan Company, UltraTech Cement, NTPC, Bajaj Finserv ஆகிய நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவை கண்டன. அதே நேரம் Tata Motors, BPCL, Grasim Industries, Eicher Motors, Adani Enterprise ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. Apar Industries, Bank of India, BEML, BHEL, Birla Corporation, Godrej Industries, HPCL, HP Adhesives, Indian Bank, IRB Infrastructure, JSW Holdings, LIC Housing Finance, Nippon Life India Asset Management, Oil India, Petronet LNG, Prime Focus, Savita Oil Technologies, Shakti Pumps, Shriram Finance, Star Cement, Tata Investment Corporation, Tata Motors DVR, UTI Asset Management Company உள்ளிட்ட 500க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் 52 வார உச்சத்தை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 5860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 78 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் உயர்ந்து 78 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.