ஹிண்டன்பர்குக்கு மொரீசியஸ் பதில்..
செபியின் தலைவர் மதாபி புரிபுச் மீது சரமாரியான புகார்களை தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு மொரீசியஸ் பதில் அளித்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிதி ஆய்வு நிறுவனம், கடந்தாண்டு அதானி குழுமம் முறைகேடு செய்ததாக சரமாரியான புகார்களை முன்வைத்தது. அதானி குழுமத்தின் சாம்ராஜ்ஜியத்தையே அசைத்துப்பார்த்தது அந்த குற்றச்சாட்டு. அதில் இருந்து அதானி குழுமம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அதானி குழுமத்துடன் தொடர்பு இருப்பதாக இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் தலைவரான மதாபி புரி புச் மீதும் ஹிண்டன்பர்க் அமைப்பு விரலை நீட்டியது. மேலும் அந்த புகாரில் மதாபியின் நிறுவனத்துக்கு வரும் நிதி மொரீசயஸில் இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள மொரீசியஸ் நிதி சேவைகள் ஆணையம்(FSC)., ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஏதும் தங்கள் நாட்டில் இருந்து இயங்குபவை இல்லை என்று தெரிவித்துள்ளது.
மொரீசியஸ் நாட்டு சட்டத் திட்டங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு உதவும் வகையில்தான் இருப்பதாகவும்.,மோசடி நிதி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்நாட்டு விதிகளுக்கு உட்பட்டால் மட்டும்தான் உரிய உரிமம் வழங்கப்படும் என்றும் FSC அமைப்பு தெரிவித்துள்ளது. IPE பிளஸ் என்ற நிதியை குறிப்பிட்டு விளக்கம் அளித்திருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம். குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு மொரீசியஸில் அனுமதி இல்லை என்றும், அந்த நிதி மொரிசியஸில் வசிப்பவரிடம் இருந்து செல்லவில்லை என்றும் விளக்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த நிதியை வினோத் அதானியின் நிறுவனத்திடம் இருந்து மதாபியின் நிறுவனத்துக்கு சென்றதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியிருந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புகாரால் அதானி நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்த பங்குகளின் மதிப்பீட்டை மீண்டும் மதிப்பீடு செய்வதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.