24 பேரை வேலையை விட்டு தூக்கிய மெட்டா காரணம் தெரியுமா..
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மார்க் சக்கர்பர்க் இருக்கிறார். இவரின் முதல் நிறுவனமான மெட்டா அண்மையில் 24 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். அவர்கள் திறமை இல்லாமல் தூக்கப்படவில்லை. செய்த குற்றத்துக்காக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா, உணவுக்காக வழங்கப்பட்ட கிரிடிட் புள்ளிகளை மோசடியாக பயன்படுத்தி பற்பசை, துணி பவுடர், ஒயின் கிளாஸ் உள்ளிட்டவை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதுக்குலாமா வேலையைவிட்டு தூக்குவீங்க என்று கண்டனக்குரல்களும் எழுந்துள்ளன. ஆண்டு வருமானம் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பளம் வாங்கியவரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இலவசமாக உணவும் மெட்டா நிறுவனம் அளித்து வரும் நிலையில் , காலை உணவுக்கு 20 டாலர்களும், மதிய உணவுக்கும், இரவு உணவுக்கும் தலா 25 டாலர்களும் பணம் வழங்கப்படுகிறது. இதை தவறாக பயன்படுத்தியதால் மெட்டா அதிகாரிகளுக்கு கோபம் வந்து பணியை விட்டு தூக்கியுள்ளனர். பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியாக 21,000 பேரை வேலையைவிட்டு மெட்டா நிறுவனம் தூக்கிய நிலையில் சிறிய தவறை கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. பேஸ்புக்கை போலவே கூகுள் நிறுவனத்திலும் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டேப்ளர், டேப் உள்ளிட்டவை தேவைப்பட்டால் வரவேற்பு பகுதியில் சென்று கேட்டுதான் வங்க வேண்டுமாம்.